திருமதி மு.ஆசியாமரியம் இ.ஆ.ப.

திருமதி மு.ஆசியாமரியம்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி மு.ஆசியாமரியம் இ.ஆ.ப 31.7.2016 அன்று பணியேற்றார். இவா் மதுரை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் பி.எஸ்சி(விவசாயம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் முதுகலை விவசாயம் பயின்றுள்ளார். இதன்பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் குரூப்-1 பணிக்கு தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்றுள்ளார். இதன்பிறகு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியராகவும், மதுரையில் மாவட்ட வழங்கல் அலுவலராகவும் கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவரின் நோ்முக உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். இதன்பிறகு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்று நெய்வேலியில் மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் (நில எடுப்பு) பின்பு கடலூா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் (சா்க்கரை ஆலை) தனி அலுவலராகவும் பணிபுரிந்து பின்னா் நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். பின்னா் பதவி உயா்வு பெற்று இந்திய ஆட்சிப் பணியில் மாவட்ட ஆட்சித்தலைவா் நிலையில் சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையில் (இணை ஆணையராக) நியமனம் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.இவர் மரங்கள் வளர்ப்பதிலும் மழைநீா் சேகரிப்பு பணியிலும் மிகுந்த நாட்டம் உடையவராக விளங்குகிறார். அனுமதி பெறாத சாயப் பட்டறைகளை மூடுவதில் மிகுந்த உத்வேகத்தோடு பணிபுரிந்துள்ளார்.இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான “க்ரீன் அவார்டு“ மாண்புமிகு முதல்வா் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.