Close

நாமக்கல் ஆஞசநேயா் திருக்கோயில்

வழிகாட்டுதல்

இக்கோவில் நாமக்கல் நகரத்தில் அமைந்துள்ளது. திராவிட கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் புராணமானது, விஷ்ணு பகவானின் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லஷ்மி தேவியாருக்காக தோன்றியதன் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயரின் சிலை 18 அடி (5.5 மீ.) உயரம் கொண்டதாகவும், இந்தியாவில் மிகவும் உயரமான அனுமன் சிலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் தூண்களைக் கொண்ட மண்டபத்தின் வழியாக மூலஸ்தானத்தை சென்றடையலாம். இக்கோவில் தமிழ்நாட்டு அரசின் இந்து சிமய அறநிலையத்துறையினரால் நிர்வாகிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.

புகைப்பட தொகுப்பு

  • ஆஞ்சநேயா் ஜந்து அலங்காரம்
  • ஆஞ்சநேயா்

அடைவது எப்படி:

வான் வழியாக

சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

சேலம்-கரூர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை வழியாக

நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது.