தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
தாட்கோ திட்டங்கள்
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்ட தொகையில் மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ 3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
- 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/- இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
நிபந்தனைகள்
- இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறைமை: துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக
Apply online:
https://newscheme.tahdco.com
தகுதி
- விண்ணப்பதார் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 நபர்கள் இருக்க வேண்டும்.
- குழு உறுப்பினர்கள் வயது 18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
- குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- சுய உதவி குழுக்களுக்கு திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ 6.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- சந்தை மதிப்பீட்டின்படி, திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 லட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
- நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.00 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
- முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
- வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
தகுதி
- விண்ணப்பதாரார் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமான ரூ 3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
- நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.
- அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மானிய விபரம்
குதிரைத்திறனுக்கேற்ப 90 % அரசு மானியம் மற்றும் 10 % பயனாளி பங்குத்தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
| வ.எண் | குதிரைத் திறன் | 90% மானியம் | 10% பயனாளி பங்குத்தொகை | மொத்தம் |
|---|---|---|---|---|
| 1 | 5 H.P | 2,25,000/- | 25,000/- | 2,50,000/- |
| 2 | 7.5 H.P | 2,47,500/- | 27,500/- | 2,75,000/- |
| 3 | 10 H.P | 2,70,000/- | 30,000/- | 3,00,000/- |
| 4 | 15 H.P | 3,60,000/- | 40,000/- | 4,00,000/- |
விண்ணப்பிக்கும் முறைமை: துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக
Apply online:
https://newscheme.tahdco.com
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கருக்கு பட்டப்படிப்பினை உள்நாடு மற்றும் அயல்நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC, NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
முழுநேர படிப்புகளுக்கான மாணாக்கர்களுக்கு மிககுறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- தூய்மை பணியாளர்கள் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் கல்வி பயில ரூ.10.00 இலட்சம் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ஆதிதிராவிடர் மாணாக்கர்ளுக்கு ரூ.5.00 இலட்சம், பழங்குடியினர் மாணாக்கர்ளுக்கு ரூ.3.00 இலட்சம் மற்றும் தூய்மை பணியாளர்களின் மாணாக்கர்களுக்கு ரூ.4.50 இலட்சம் இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்
- ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கு – 6.5%
- பழங்குடியின மாணாக்கர்களுக்கு – 6%
- தூய்மை பணியாளர்களின் மாணவர்கள் இந்திய நாட்டில் கல்வி பயில – 6%, வெளிநாட்டில் கல்வி பயில – 7%, இந்திய நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு – 5.5%, வெளி நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு – 6.5%
கடனை திரும்ப செலுத்தும் காலம்
- கல்வி கடன் பெற்ற மாதத்தில் இருந்து வட்டி பணம் மாதம் தோறும் செலுத்த வேண்டும்.
- படிப்பு முடித்த அல்லது வேலைக்கு செல்லுதல் இதில் எது முன்னதோ, அதிலிருந்து 5 ஆண்டுகளில் 60 தவணைகளில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைமை: துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக
Apply online:
https://tel.tahdco.com/
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, திட்ட அறிக்கை, விலைப்புள்ளி
விண்ணப்பிக்கும் முறைமை: துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக
Apply online:
https://newscheme.tahdco.com
தொடர்பு அலுவலரின் பதவி
மாவட்ட மேலாளர், தாட்கோ
துறைத் தலைமை தொலைபேசி எண் / மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இயக்குநர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்.
தாட்கோ, எண் 31, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.
இணையதள முகவரி:
www.tahdco.com
தொலைபேசி எண்: 91 44 24310221
மின்னஞ்சல் முகவரி:
tahdcoheadoffice@gmail.com
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்
தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பித்தினை அந்தந்த மாவட்டத்தின் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பிப்பவர் இந்நல வாரிய உறுப்பினராக பதிவு பெறத் தகுதியுடைய நபர்கள் தூய்மைப் பணிபுரிவோர் என்பதற்கான சான்றிதழை சுகாதார ஆய்வாளர் / உதவி செயற் பொறியாளர் / செயல் அலுவலர் / மாநகராட்சி ஆணையர் / வட்டாட்சியர் அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பித்தினை மாவட்ட மேலாளர், தாட்கோ அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட மேலாளர், தாட்கோ உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கப்படுகிறது.
| வ.எண். | நலத்திட்டத்தின் பெயர் | வழங்கப்படும் தொகை | ||
|---|---|---|---|---|
| 1. | விபத்துக் காப்பீட்டுத்திட்டம் | |||
| பணியிடத்தில் விபத்து/மரணம் உறுப்புகளை இழந்தால் சரி செய்ய இயலாத அளவு இழந்தால் | ரூ.5,00,000 | |||
| ஒரு கையினை இழந்தால் | ரூ.1,00,000 | |||
| ஒரு காலிணை இழந்தால் | ரூ.1,00,000 | |||
| ஒரு கண் முழுவதும் சரி செய்ய முடியாத அளவு பார்வை இழப்பு | ரூ.1,00,000 | |||
| ஏனைய காயங்கள் ஏற்பட்டு முழு இயலாமைக்கு | ரூ.1,00,000 | |||
| விபத்தினால் மரணம் ஏற்பட்டால் | ரூ.1,00,000 | |||
| 2. | இயற்கை மரண உதவி | ரூ20,000 | ||
| 3 | ஈமச்சடங்கு உதவித் தொகை | ரூ.5,000 | ||
| 4 | கல்வி உதவித்தொகை | |||
| a | 10ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) | ரூ.1,000 | ||
| b | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (இருபலருக்கும்) | ரூ.1,000 | ||
| c | 11ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) | ரூ.1,000 | ||
| d | 12ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) | ரூ.1,500 | ||
| e | 12ம் வகுப்பு படித்து வரும் (இருபலருக்கும்) | ரூ.1,500 | ||
| f | முறையான பட்டப் படிப்பு | படிப்பு | ரூ.1,500 | |
| விடுதியில் தங்கி படித்தால் | ரூ.1,750 | |||
| g | முறையான பட்ட மேற்படிப்பு | படிப்பு | ரூ.4,000 | |
| விடுதியில் தங்கி படித்தால் | ரூ.5,000 | |||
| h | தொழில் நுட்பப் பட்டப்படிப்பு | படிப்பு | ரூ.4,000 | |
| விடுதியில் தங்கி படித்தால் | ரூ.6,000 | |||
| i | தொழில் நுட்பப் பட்ட மேற்படிப்பு | படிப்பு | ரூ.6,000 | |
| விடுதியில் தங்கி படித்தால் | ரூ.8,000 | |||
| j | ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிப் படிப்பு | படிப்பு | ரூ.1,000 | |
| விடுதியில் தங்கி படித்தால் | ரூ.1,200 | |||
| 5 | திருமண உதவித்தொகை தொழிலாளர் (அ) மகள் (அ) மகள் குடும்பத்திற்கு இருமுறை மட்டும் | |||
| ஆண் | ரூ.3,000 | |||
| பெண் | ரூ.5,000 | |||
| 6 | மகப்பேறு உதவி | ரூ.6,000 | ||
| கருச்சிதைவு/கருகலைப்பு | ரூ.3,000 | |||
| 7 | கண்கண்ணாடி உதவி | ரூ.500 | ||
| 8 | முதியோர் ஓய்வூதியம் | ரூ.1000 | ||
விண்ணப்பிக்கும் முறைமை: துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக
Apply online:
https://tncwwb.com/