மாவட்டம் பற்றி
நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் என எட்டு வட்டங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் வடக்கு திசையில் சேலம் மாவட்டதினாலும், தெற்கு திசையில் கரூர் மாவட்டத்தினாலும், கிழக்கு திசையில் திருச்சி மற்றம் சேலம் மாவட்டங்களினாலும், மேற்கு திசையில் ஈரோடு மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் புவியியல் ரீதியிலான பரப்பளவு 3368.21 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 11.00′ மற்றும் 11.360′ வடக்கு அட்சரேகைகளுக்கும், 77 .28′ மற்றும் 78.300′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.