Close

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.

வருவாய்

  1. பிரிவு அ: தேர்தல்கள், அனைத்து நிலை அலுவலர்கள் தொடர்பான பணிகள், கருணை அடிப்படையில் பணிநியமனம், பாசனம், ஆண்டுத்தணிக்கை, ஜமாபந்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை குமுக்கள் வருகை, வாகன பராமரிப்பு, தபால் பிரிவு.
  2. பிரிவு பி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பிரிவினருக்கு கல்வி உதவித்;தொகை வழங்குதல், விடுதிகள் மற்றும் இலவச பட்டா வழங்குதல், நலத்திட்ட உதவிகள் தொடர்பான பணிகள்.
  3. பிரிவு சி: அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் தொடர்பான பணிகள், எழுதுபொருட்கள் இருப்;பு, பதிவறை பராமரித்தல்;, இயற்கை இடர்பாடுகள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் வழங்குதல், அரசிதழ் வெளியீடுகள், பிற்ப்பு இறப்பு பதிவுகள், தளவாடங்கள் பராமரிப்பு, மின்கட்டணனம் தொலைப்பேசிக்கட்டணம் மற்றும் கட்டிடம் பராமரிப்பு.
  4. பிரிவு டி: ஆதிதிராவிடர் நலப்பிரிவினருக்கு கல்வி உதவித்;தொகை வழங்குதல், விடுதிகள் மற்றும் இலவச பட்டா வழங்குதல், நலத்திட்ட உதவிகள் தொடர்பான பணிகள்.
  5. பிரிவு ஈ: கலால் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான பணிகள்.
  6. பிரிவு எப்: குடிமைப் பொருள் வழங்கள் தொடர்பான பணிகள், அத்தியாவசியப் பொருட்கள் உரிமம் வழங்குதல், அன்னபூர்ணா மற்றும் முதியோர் உதவி தொகை உரிமம், கைப்பற்றுகை இனங்கள், வெளிச்சந்தை மண்ணெண்ணெய் மொத்த மற்றும் சில்லறை வணிக உரிமம் வழங்குதல், நியாய விலைக் கடைகள் தணிக்கை.
  7. பிரிவு ஜி: முதியோர் ஓய்வூதியத்திட்டம், அனைத்து நிவாரணத்திட்டம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள், அம்மா திட்டம், மனுநீதிநாள் முகாம், இலவச வேட்டி சேலைத்திட்டம், அமைச்சர்;, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், ஆளுநர், குடியரசுத்தலைவர் ஆகியோரின் மனுக்கள்.
  8. பிரிவு எச்: நிலஎடுப்பு தொடர்பான பணிகள்.
  9. பிரிவு எல்: நில ஒப்படை, இலவச வீட்டுமனைப்பட்டா, நிலமாறுதல், நிலஉரிமை மாறுதல், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, பூமிதானம், நகர்புறநிலவரி, குத்தகை, வன நிலங்கள், மரங்கள், பஞ்சமி நிலங்கள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு.
  10. பிரிவு எம்: சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, வெடிமருத்து உரிமம், படைக்கல உரிமம், இந்திய குடியுரிமைச் சட்டம், வரதட்சனை கொடுமை.
  11. பிரிவு ஒ: பட்டா மாறுதல் மேல்முறையீடு, நிலவரி, ஆதின ஒழிப்புச்சட்டம், யுடிஆர் மேல் முறையீடு, சுதந்திர போராட தியாகிகள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம், சுதந்திர தினம், குடியரசு தினம் நடத்துதல், உறுதிமொழிகள் ஏற்றல், பல்வகை, வறியர் வழக்கு, வருவாய் வசூல் சட்டம்.
  12. பிரிவு ஆர்: ரொக்கப்பதிவேடு பராமரித்தல், கடன்களும் முன்பணங்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது பிரிவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள், தணிக்கை தடைகள், ஓய்வூதியர் குறைதீர் நாள் மனுக்;கள், பட்ஜெட், நிதி ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சி

  1. உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) :: கிராம பஞ்சாயத்துகள்
  2. உதவி இயக்குனர்(தணிக்கை) :: தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு
  3. மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) :: சிறு சேமிப்பு
  4. மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு திட்டம்) :: பள்ளி சத்துணவு திட்டம்
  5. திட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) :: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  6. உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) :: பேரூராட்சிகள் நிர்வாகம்