Close

மாவட்டம் பற்றி

நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் , மோகனூர் என எட்டு வட்டங்கள் உள்ளன.

எல்லைகள்

நாமக்கல் மாவட்டம் வடக்கு திசையில் சேலம் மாவட்டதினாலும், தெற்கு திசையில் கரூர் மாவட்டத்தினாலும், கிழக்கு திசையில் திருச்சி மற்றம் சேலம் மாவட்டங்களினாலும், மேற்கு திசையில் ஈரோடு மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.

அமைவிடம் மற்றும் பரப்பு

நாமக்கல் மாவட்டத்தின் புவியியல் ரீதியிலான பரப்பளவு 3368.21 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 11 .00′ மற்றும் 11 .360′ வடக்கு அட்சரேகைகளுக்கும், 77 .28′ மற்றும் 78 .300′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.

நிர்வாகம்

நாமக்கல் மாவட்டமானது நிர்வாக பணிகளுக்காக இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், 8 வட்டங்களாகவும், 31 குறுவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஊரக நிர்வாகத்திற்காக இம்மாவட்டம் 5 நகராட்சிகளாகவும், 15 ஊராட்சி ஒன்றியங்களாகவும், 19 நகர பஞ்சாயத்துகளாகவும், 322 கிராம பஞசாயத்துக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை 17,26,601 ஆகும். இதில் 8,69,280 ஆண்களும், 8,57,321 பெண்களும் அடங்குவர்.