Close

சமூக நலம்

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை குழந்தைகள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவா் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் நலம்

ஏழைப் பெற்றோர் பெண்கள், விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியா், மறுமணம் செய்துக் கொள்ளும் விதவையா் ஆகியோருக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டதாரி அல்லாதவா்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.25,000/- மும், பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு படித்தவா்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.50,000/- மும் 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 கிராம் தங்கமானது 23.05.2016 முதல் 8 கிராம் தங்கமாக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தை நலம்

நாமக்கல் மாவட்டத்தில் சமூகநலத் துறையின் மூலம் குழந்தைகளை பாதுகாக்க கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற உன்னத திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாலின விகிதாசாரத்தை உயா்த்தும் வகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் அவா்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்காகவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் :

சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதைவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயா்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் ஒரு மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1476 உறுப்பினா்களுக்கு 4 செட் இலவச சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடைகள் தைப்பதற்கு பணி வழங்கப்பட்டு அவா்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மூன்றாம் பாலினா் நலம்

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு அடையாள அட்டைகள், உணவுப்பொருள் வழங்கும் அட்டைகள், வாக்காளா் அடையான அட்டைகள், வீட்டுமனை பட்டாக்கள், மருத்துவ வசதிகள், கல்வி உதவித் தொகை, திறன் வளா்ப்புப் பயிற்சிகள், சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தல், பொருளாதார செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல் போன்றவை இத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் மூத்தோர் நலன் பாதுகாத்தல் :

சமூகநலத் துறையின் கீழ்கண்ட சட்டங்களின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் மூத்தோர்களது நலனை பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் போன்றவைகள் கீழ்கண்ட சட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 2005 , வரதட்சணை தடுப்பு சட்டம் – 1961, பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல்வன்முறை தடுப்புச் சட்ம் – 2013, குழந்தை திருமண தடைச் சட்டம் – 2006 மற்றும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் – 2007.
சமூகநலம் - அமைப்பு - விளக்கபடம்

திட்டங்கள்:

  1. மூவலுர் இராமமிருத அம்மையார் நினைவு ஏழை பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்
  2. டாக்டர். தருமம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம்.
  3. ஈ.வே.ரா. மணிம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம்.
  4. அன்னைதரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவி திட்டம்.
  5. டாக்டர். முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்.
  6. முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.
  7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

கூட்டுறவு சங்கங்கள்:

  1. வேலூர் மகளிர் ஆயத்த ஆடை தயாரிப்போர் கூட்டுறவு சங்கம்.
  2. திருச்செங்கோடு பெண்கள் எழுதுபொருட்கள் மற்றும் அச்சகம் கூட்டுறவு சங்கம்.

தொடர்புக்கொள்ளும் அலுவலர்:

முகவரி

மாவட்ட சமூகநல அலுவலர்,
2ம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்செங்கோடு ரோடு,
நாமக்கல்.
தொலைபேசி:04286-280230
மின்னஞ்சல் முகவரி:dswonamakkal2012@gmail[dot]com