Close

வரலாறு

மலையின் மீது அமைந்துள்ள பாலடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவறுகளில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெறும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாலும், நாமக்கல் ‘ கோழிகள் நகரம்’ என்றும், ‘முட்டை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நாமக்கல் கோட்டை

நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும். இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும். ஒருகாலத்தில் நாமக்கல் பகுதியானது பல்லவ வம்சத்தில் மணம்புரிந்திருந்த அட்டிக்குல மன்னன் குணசீலா என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது. பின்னர் 9ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மீது படையெடுத்து வென்ற சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னர் விஜயநகர பேரரசின் ஆளுகையின் கீழமைந்த மதுரா பதில் ஆளுநர் அலுவலின்கீழ் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர், ஹைதர் அலியின் படைத்தலைவர்களில் ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, 1768 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மலைப்பிரதேசமானவும், தெற்கு பகுதிகள் சமவெளிகளாகவும் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தின் பிரதான அருவிகளாக காவிரியாறு, ஐய்யாறு, கரிப்பொட்டான் ஆறு மற்றும் திருமணிமுத்தாறு ஆகியவை திகழ்கின்றன. இவற்றில் காவிரி ஆறானது தெற்கு- தென்மேற்கு திசைகளில், மாவட்டத்தின் எல்லையை அறவனைத்தவாறு செல்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் தோட்டம் எனப்படுவது கொல்லிமலை . இது ‘நாடு’ என்று அழைக்கப்படும் 16 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ள ஊராட்சி ஒன்றியத்தின் முலம் நிர்வகிக்கப்படுகிறது. கொல்லிமலை 371.03 சதுர க.மீ. பரப்பளவில், கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பழங்குடியினர் ‘மலையாளிகள்’ ஆவர். இப்பகுதி கடையேழு வல்லல்களில் ஒருவரான வல்வில் ஓரி எனும் குறுநில மன்னரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அரப்பலீசுவரர் கோவில் இந்து மதத்தின் ஆதிக்கத்தின் முன்பு ஜெய்ன மத துறவிகளின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளது. இக்கோவிலின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்னும் பிரபலமான அருவி அமைந்துள்ளது.

லாரிகளுக்கு கூடு கட்டும் தொழிலின் காரணமாக நாமக்கல் இந்திய வரைபடத்தில் முக்கயமான இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொழில் நாமக்கல்லின் தனிச்சிறப்பு. 1960களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு கூடு கட்டும் பட்டறைகள் மற்றும் அவற்றினை சார்ந்த பிறவகை தொழில்களும் நாமக்கல்லில் செயல்பட்டு வருகின்றன. லாரிகள், இழுவை இணைப்பு வண்டிகள் மற்றும் சமயல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் வகை லாரிகள் போன்ற பலவகை லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக ‘ போக்குவரத்து நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

புகழ்பெற்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நாமக்கல் நகரத்தில் பிறந்தவராவார். இவரது நினைவாக நாமக்கல் நகரத்தில் இவரது பெயரில் மகளிருக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கால்நடைக் கல்லூரிகளில் ஒன்றான கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும், தனியார் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமயின் சலையானது 6.7 மீட்டர் உயரம் கொண்டது. அது 996 கி.பி.-ல் செதுக்கப்பட்டதாகும். மேலும், நரசிம்மர் சுவாமி மற்றும் அம்மன் கோவில்கள் நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டத்தின் மற்றொரு முக்கியமான வட்டமாக இராசிபுரம் வட்டம் திகழ்கிறது. இராசிபுரம் நகரத்தின் பிரதான தொழிலாக ஆடை நெய்தல் உள்ளது. சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த ‘பட்டுநூல்காரர்’ என்னும் பிரிவினர் ‘ கைகோலர்’ என்னும் மற்றொரு பிரிவினருடன் இராசிபுரம் நகரத்தில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் நெய்து வருகின்றனர். இவ்வட்டத்தின் மற்றொரு முக்கியமான தொழிலாக ஜவ்வரிசி தயாரிப்பு உள்ளது. 176க்கும் அதிகமான ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அமைந்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஆகியவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெய் தயாரிப்பும் இராசிபுரம் வட்டத்தின் ஒரு முக்கிய தொழிலாக விளங்குகிறது.

திருச்செங்கோடு நகரமானது வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்;றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். 19ம் நூற்றாண்டில் இது ‘புலவர் சங்கம்’ என்னும் தமிழ் கலைக்கழகத்தின் இருப்பிடமாக திகழ்ந்துள்ளது. சுமார் 37 நூற்பாலைகளும், 10,000க்கும் அதிகமான விசைத்தறிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கைத்தறிகளும் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. இங்கு ஒரு தனியார் சர்க்கரை ஆலை மற்றும் ஒரு தனியார் காகித ஆலை இயங்கி வருகின்றன. ஆழ்துலையிடும் கருவிகளைக்கொண்ட வாகனங்களுக்கு திருச்செங்கோடு புகழ்பெற்றது. 2,000க்கும் அதிகமான இப்பகுதியைச் சேர்ந்த இவ்வகையான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. திருச்செங்கோடு நகரத்தில் அமைந்துள்ள அர்தனாரீஸ்வரர் ஆலையம் ஒரு புனித யாத்திரை தளமாகும்.

பரமத்தி வேலூர் வட்டத்தில் புகழ்பெற்ற காவிரி ஆறானது செல்கிறது. இதனால் ஆற்றுப்பாசனம் உள்ள நிலங்கள் பரமத்தி மற்றும் மோகனூர் ஒன்றியங்களில் அமைந்துள்ளன. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது பரமத்தி வேலூர் வட்டத்தில் மோகனூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.