தாட்கோ
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்
பொது :
ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது.
திட்டங்கள்
- நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் :
ஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. - தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) :
பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30% மான்யத்துடன் கூடிய வங்கி கடன் திட்டம். - தொழில் முனைவோர் திட்டம் :
ஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோராக உயர்த்திட 18 முதல் 65 வயதிற்குட்பட்ட வேலையற்ற புதிய தொழில் முனைவோருக்கான பொருளாதார கடனுதவி திட்டம். - இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் :
18 முதல் 45 வயதிற்குட்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்கிட பொருளாதார கடனுதவி திட்டம். - இலவச துரித மின் இணைப்பு திட்டம் :
ஆழ்துளை கிணறு , கிணறு உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கிட ரூ.75,000- வழங்கப்படுகிறது. - சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம் :
குறு தொழிலினை மேம்பாடு செய்திட ரூ.25,000- வழங்கப்படுகிறது. - சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் :
ஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது 2.50 இலட்சம் முன் விடுவிப்பு மான்யமாக வழங்கப்படுகிறது. - திறன் மேம்பாட்டு பயிற்சிகள் :
வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய, ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சி (டேலி), சில்லரை செலவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர்.வெல்டர். வீட்டு பயன்பாட்டு மின் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. - மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் :
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.20000 பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது. - மேலாண்மை இயக்குநர் / தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டம் :
மேலாண்மை இயக்குநர்/ தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.
வ.எண் 1 முதல் 7 வரையுள்ள திட்டங்களுக்கு https://www.application.tahdco.com தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
அலுவலக முகவரி
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,நாமக்கல்
தொலைபேசி எண் : 04286-280778
மின்னஞ்சல்: dmnmkltahdco@yahoo.com