Close

வேளாண்மை

நாமக்கல் மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தின் முக்கிய பிரிவாக வேளாண்மைத் தொழில் தொடர்ந்து இருந்து வருகிறது. 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருகிறார்கள். மாவட்டத்தினுடைய மொத்த பரப்பானது 3363.35 சதுர கிலோ மீட்டராகும். இதில் மொத்த பயிர் பரப்பானது 3.367 இலட்சம் எக்டேராகும். நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையைப் பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது

பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும் அது தொடர்பான தொழில் நுட்பங்களை விளம்பரப்படுத்துதல் மூலமாகவும் வேளாண்மை துறையானது உணவு உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சியினை அடைவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உற்பத்தியினை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் – பயறு வகைகள், எண்ணெய்வித்து, ஊட்டமிகு சிறுதானியங்கள், எண்ணெய்பனை, மரக்கன்றுகள் நடுதல், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மண் வள அட்டை இயக்கம், மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத் தொழில் நுட்பங்கள் ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிர் பரவலாக்கம் மூலம் அதிக வருமானம் கிடைப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கிடைப்பதனால் உழவுத் தொழில் செய்பவர்களுடைய பொருளாதார நிலை உயருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தினுடைய மொத்த புவியியல் பரப்பானது 3,36,719 எக்டேராகும். இதில் நிகர பயிர் சாகுபடி பரப்பானது 1,41,537 எக்டேராகும். மேலும் இவற்றில் 60,939 எக்டேர் நீர் பாசனம் பெறும் பகுதியாகும். மீதமுள்ள 80,598 எக்டேர் மானாவாரி பகுதியாகும். மேட்டூா் கிழக்குக்கரை வாய்க்கால் மூலம் 4585 எக்டேர் பரப்பளவில் பள்ளிபாளையம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. சராசரி வருடாந்திர மழை அளவானது 716.54 மி.மீ ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் இம்மாவட்டத்தினுடைய மக்களுக்கு வேளாண்மை முதன்மைத் தொழிலாகத் திகழ்கிறது

குறிக்கோள்

விவசாயிகளுக்கு அன்றாடம் வேளாண் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், தரமான விதைகள் வழங்குதல், தரமான இரசாயன உரங்களைக் கிடைக்கச் செய்வதோடு அதன் விநியோகத்தைக் கண்காணித்தல், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழில் நுட்பங்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதோடு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மூலப்பொருட்களின் உற்பத்தியினைப் பூர்த்தி செய்து வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பணிகளை வேளாண்மைத் துறை செய்து வருகிறது

நோக்கம்

  1. வேளாண்மைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை நிலைப்படுத்துதல்.
  2. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  3. இரண்டு மடங்கு உற்பத்தி மூன்று மடங்கு வருமானம் விவசாய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்தல்.

மழையளவு

சராசரி மழையளவானது 716.54 மி.மீ ஆகும். இம்மாவட்டம் அனைத்து பருவகாலங்களிலும் மழை பெறுகின்றது. இருப்பினும் அதிகமான மழையளவு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கப்பெறுகின்றது.

வேளாண் காலநிலை மண்டலம்

தமிழ்நாடு 7 பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வடமேற்கு மண்டலத்திலும், மேற்கு மண்டலத்திலும் பிரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 40°c -லிருந்து குறைந்தபட்சமாக 18°c வரை நிலவி வருகிறது.

மண் வகைகள்

நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவிகித மண்ணின் தன்மை செம்மண்ணாக உள்ளது. இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான மண்ணின் வகைப்பாடு இருக்கூா், து@க்கானூா் மற்றும் பீளமேடு ஆகும். மண்ணின் கார அமில நிலையின் அளவு 5.2 முதல் 8.7 வரை உள்ளது. மன்ணிலுள்ள உப்பின் அளவு 0.1 முதல் 1.0 வரை உள்ளது.

பாசன ஆதாரங்கள்

வாய்க்கால், குளம், ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் ஆகியன இம்மாவட்டத்தினுடைய பாசனத்திற்கான ஆதாரங்களாகும். இதில் அதிக பகுதிகள் குழாய் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறுகின்றன.

வாய்க்கால் பாசனம்

பள்ளிபாளையம் வட்டாரத்தில் மேட்டூா் கிழக்குகரை வாய்க்கால் மூலம் 4585 எக்டோ் பாசனம் பெறுகின்றது. ராஜவாய்க்கால் மூலம் 4215 எக்டா் மோகனூா் வாய்க்கால் மூலம் 355 எக்டா், குமாரபாளையம் வாய்க்கால் மூலம் 1146 எக்டா், பொய்யோp வாய்க்கல் மூலம் 323 எக்டா் பாசனம் பெறுகின்றது.

முக்கிய வேளாண்மை பயிர்கள்

நெல், சோளம், நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் இம்மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவிலான துறை நிர்வாக அமைப்பு

அமைப்பு - விவசாயம்

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் மற்றும் செயல்படுத்தும் அதிகாரியாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் செயல்படுகிறார். மேலும் வேளாண்துறையுடன் தொடர்புடைய அனைத்து சகோதரத் துறைகளுக்கும் தொடர்பு அதிகாரியாக செயல்படுகிறார்
வட்டார வாரியான துறை நிர்வாக அமைப்பு:

அமைப்பு - விவசாயம் - வட்டாரம்நாமக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் 15 வேளாண்மை விரிவாக்க மையங்களும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு வேளாண்மை விரிவாக்க மையத்தின் தலைமை அலுவலராக வேளாண்மை உதவி இயக்குநர் செயல்படுகிறார். அனைத்துத் திட்டங்களும் வட்டார அளவில் செயல்படுத்தப்படுகின்றன. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டில் வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் செயல்படுகின்றனர். வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 3 உதவி வேளாண்மை அலுவலர்களும் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 2 உதவி வேளாண்மை அலுவலர்களும் பணிபுரிகின்றனர். உதவி விதை அலுவலர் விதைப் பண்ணைகளை அமைத்து அந்தந்த வட்டாரத்திற்குத் தேவையான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைகளை கொள்முதல் செய்வார். கிடங்கு மேலாளர் விதை மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வார்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

வ.எண் அலுவலகம் தொலைபேசி மின் அஞ்சல் முகவரி
1 வேளாண்மை உதவி இயக்குனர்,
வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம்,
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்,
மோகனூா் ரோடு,
நாமக்கல்-637001.
04286-233698 adaagrinkl@gmail[dot]com
2 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், BSNL அலுவலகம் அருகில், சேந்தமங்கலம் ரோடு, புதுச்சத்திரம் – 637018.. 04286-243333 adaaecpcm@gmail[dot]com
3 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், சேந்தமங்கலம் – 637409. 04286-270027 adaaecsdm@gmail[dot]com
4 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், எருமப்பட்டி-637013. 04286-252225 adaaecept@gmail[dot]com
5 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், மோகனூா் 637015. 04286-255555 adaaecmhr@gmail[dot]com
6 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், செம்மேடு (அஞ்சல்), கொல்லிமலை-637411. 04286-247585 agrikolli@gmail[dot]com
7 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், இராசிபுரம்-637408. 04287-224678 adaaecrpm@gmail[dot]com
8 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், வெண்ணந்தூா்-637505.. 04287-264109 adavnr@gmail[dot]com
9 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், நாமகிரிபேட்டை-637406. 04287-240526 adanamagiripettai@gmail[dot]com
10 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், திருச்செங்கோடு-637211. 04288-252609 ada_tge@yahoo[dot]in
11 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பள்ளிபாளையம்-637006. 04288-242996 adappm@gmail[dot]com
12 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், எலச்சிபாளையம்-637202. 04288-231242 adaeplm@gmail[dot]com
13 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், செம்பாம்பாளையம், கருமனூா் (அஞ்சல்), மல்லசமுத்திரம்-637503.. 04288-238800 adaaecmsm@yahoo[dot]in
14 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பரமத்தி-637207. 04268-251220 adaaecpmt@gmail[dot]com
15 வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், கபிலா்மலை-637204. 04268-254244 adaaeckbm@gmail[dot]com

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

வேளாண்மை இணை இயக்குநர்,
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்,
சிலுவம்பட்டி (அஞ்சல்),
நாமக்கல் – 637001.
Phone : தொலைபேசி எண்: 04286-280465.
Email : மின்னஞ்சல்: jdagr[dot]tnnmk@nic[dot]in