அா்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வழிகாட்டுதல்திருச்செங்கோடு நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. இக்கடவுளின் உருவமானது நேர்கோட்டில் பாதி ஆணின் வடிவிலும், பாதி பெண்ணின் வடிவிலும் அமைந்துள்ளது. சிவனையும், பார்வதி தேவியையும் ஒரே வடிவில் வழிபடுவதன் அம்சமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மிக பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் உள்ள மிகவும் பழமையான பூந்துறை நாடாகும். திருச்செங்கோட்டின் பழைய பெயர் திருக்கொடிமடச்செங்கோண்டுரூர்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
சேலம் விமான நிலையம் 50 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 130 கி.மீ தொலைவில் உள்ளது
தொடர்வண்டி வழியாக
ஈரோடு ரயில் நிலையம் 25 கி.மீ தொலைவில் உள்ளது நாமக்கல் ரயில் நிலையம் 30 கி.மீ தொலைவில் உள்ளது
சாலை வழியாக
நாமக்கல்,சேலம்,ஈரோடு பகுதிகளில் இருந்து செல்லலாம்