Close

கொல்லிமலை

வழிகாட்டுதல்

கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மலைப்பகுதி மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள அறப்பலீசுவரர் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், பெரியசாமி கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவை சுற்றலா பயணிகளை கவரும் அடங்களாக உள்ளன. மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு பச்சை விற்கப்படுகிறது. இவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாத்ததில் இங்கு வல்வில் ஓரி திருவிழா கொண்டாடப்படுகிறது.

புகைப்பட தொகுப்பு

  • கொல்லிமலை பாதை
  • கொல்லிமலை மிளகு
  • கொல்லிமலை காட்சி முனையம் படம்

அடைவது எப்படி:

வான் வழியாக

-

தொடர்வண்டி வழியாக

-

சாலை வழியாக

1. நாமக்கல் to கொல்லிமலை வழி சேந்தமங்கலம் 2. ராசிபுரம் to கொல்லிமலை வழி காளப்பநாயக்கன்பட்டி 3. சேலம் to கொல்லிமலை வழி மெட்டலா-,முள்ளுக்குறிச்சி-நரியான்காடு