Close

நாமகிரி அம்மன் திருக்கோயில்

வழிகாட்டுதல்

இக்கோவில் நரசிம்மர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி நாமகிரி அம்மன் கமலாலய குளத்திலிருந்து எழுந்தருளி நரசிம்ம சுவாமி கடவுளை திருப்திப்படும் வகையில் தவம் மேற்கொண்டுள்ளார். குழந்தையின்மை மற்றும் திருமண தோஷங்களுக்கு பரிகாரம் அளிக்கும் தெய்வமாக இவர் திகழ்கின்றார். இக்கோவில் நரசிம்மர் சந்நதியை நோக்கி அமைந்துள்ளது. இங்கு நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படும் புனித தீர்த்த ஊற்று ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு வெயியே 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. இக்Nகுhவில் சிற்ப வேலைபாடுகள் பல்லவ மற்றும் சாலுக்கிய கலைகளின் வெளிப்பாடுகளாக உள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • நரசிம்மர்
  • நாமகிரி அம்மன்

அடைவது எப்படி:

வான் வழியாக

சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

சேலம்-கருர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை வழியாக

நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது.