புள்ளிஇயல்துறை
முன்னுரை
தமிழ்நாட்டின் 1902 ஆம் ஆண்டு புள்ளிஇயல் துறையானது தோற்றுவிக்கப்பட்டது. துவக்கத்தில் வருவாய் குழுவின் அங்கமாக 3 உறுப்பினர்களை கொண்டு இப்பிரிவானது வேளாண்மை புள்ளி விவரங்கள், சில்லறை விலை விவரம் மற்றும் பருவ அறிக்கைகள் ஆகியன சேகரித்து தொகுப்பறிக்கை வெளியாகும் பணிகள் மேற்கொண்டது.
இப்புள்ளியியல் பிரிவானது, 1936 ஆம் ஆண்டில் தொழிற்துறை இயக்குநரகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1948 ஆம் ஆண்டில் அரசு இணை செயலாளர் அலுவலகத்தில் ஒரு பொருளாதார ஆலோசகரின் தலைமையில் செய்யப்பட்டது. திரு. N.K. அத்யந்தயா என்பவரை முதல் இயக்குநராக கொண்டு தனிப்பிரிவாக இதே ஆண்டில் செயல்பட துவங்கியது.
1953 – ஆம் ஆண்டில் புள்ளிஇயல் துறை என்ற பெயரில் தனித்துறையாக தோற்றுவிக்கப்பட்டது. 1964-65 – ஆம் ஆண்டில் வட்ட அளவிலான அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1980-81 ஆம் ஆண்டில் மண்டல அளவில் மற்றும் வட்டார அளவில் அலுவலகங்கள் தோற்றுவிக்கபட்டன. 1998 – ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இத்துறையானது திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1996- ஆம் ஆண்டில் தற்பொழுது நிலவி வரும் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2013- ஆம் ஆண்டில் இத்துறையானது மறு சீரமைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், இத்துறையானது புள்ளிஇயல் துணை இயக்குநர் தலைமையில் கோவை மண்டல இணை இயக்குநரின் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகின்றன.
நோக்கம் மற்றும் செயல்பாடு
தமிழ்நாட்டில், வேளாண்மை புள்ளிவிவரங்கள் அளிப்பதில் தனித்துiறாக இது விளங்குகிறது. திட்டமிடுதலுக்கும், கொள்கை முடிவு எடுப்பதற்கும் தேவையான பலதரப்பட்ட சமூக, பொருளாதார புள்ளி தரவுகளை சேகரித்தல்,தொகுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியன இத்துறையில் முதன்மையான பணியாக திகழ்கின்றது. தேசிய மாதிரி ஆய்வு நிலையம் மற்றும் மத்திய புள்ளிஇயல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்தும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வேளாண்மை புள்ளிஇயல் பிரிவு, சமூக புள்ளிஇயல் பிரிவு மற்றும் மாநில வருவாய் பிரிவு என இத்துறை மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.
வேளாண்மை புள்ளிஇயல் பிரிவு
மாநில அளவில் முதன்மையான உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், நார்ப்பொருள்கள் முக்கியமான வணிகப்பொருட்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான பரப்பு, உற்பத்தி மற்றும் மகசூல் பொருட்களின் விலை மற்றும், சந்தைப்படுத்துதல்,பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி விவரம், மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கான முன் மதிப்பீட்டு அறிக்கையும் தயார் செய்யப்படுகின்றது.
சமூக புள்ளிஇயல் பிரிவு
மாநில அளவில் சமூக பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை இப்பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நுகர்வோர் செலவினம், கல்வி, சுகாதாரம், ஆண்டுத்தொழில் ஆய்வு, கைத்தறி, கட்டிடப் புள்ளி இயல், பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் தொழிற்துறை உற்பத்தியின் குறியீட்டெண்ணிற்கு அடிப்படையான குறுகிய கால பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் தொழிற்துறை உற்பத்தியின் குறியீட்டெண்ணிற்கு அடிப்படையான குறுகிய கால பொருளாதார கணக்கெடுப்பப் பணி ஆகிய திட்டங்கள் இப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
மாநில வருவாய்பிரிவு
மாநில வருவாய் மதிப்பீடு (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மற்றும் மாவட்ட வருவாய் மதிப்பீடு ஆகியன கணக்கிடப்படுகின்றன. லேபர் பீரோ மூலம் வெளியிடப்படும்
நுகர்வோர் குறியீட்டெண் கணக்கிட தேவையான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிரதிமாதம் அனுப்பப்படுகின்றது. இந்த நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. முக்கிய பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விலையில் ஏற்படும் மாற்றம் கணக்கிடப்படுகிறது.
வேளாண்மை புள்ளிஇயல், சமூக புள்ளிஇயல் மற்றும் மாநில வருவாய் ஆகிய திட்;டங்களுக்கான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புள்ளி விவரங்கள் மாவட்ட அளவில் களப்பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. மாவட்ட பணியாளர்கள் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தனியார் தொழில் நிறுவனங்கள் சாகுபடியாளர்கள், பொதுமக்கள், முறையான தொழிலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பொதுப்பணித்துறை, மொத்த மற்றும் சில்லறை விற்பனையார்களிடம் இருந்து விவரங்கள் பல்வேறு திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை சேகரித்து துறைக்கு அனுப்பபடுகிறது.
கோட்டங்கள்
நாமக்கல் கோட்டம்:
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- நாமக்கல்
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- மோகனூர்
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- புதுச்சத்திரம்.
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- சேந்தமங்கலம்.
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் எருமப்பட்டி
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- நாமகிரிபேட்டை
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- வெண்ணந்தூர்.
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்- கொல்லிமலை.
- வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-இராசிபுரம்.
திருச்செங்கோடு கோட்டம்:
- 1. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-எலச்சிபாளையம்.
- 2. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-மல்ல சமுத்திரம்
- 3. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-பரமத்தி
- 4. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-கபிலர்மலை
- 5. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-பள்ளிபாளையம்.
- 6. வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர்-திருச்செங்கோடு
எண் | அலுவலகம் | முகவரி | தொலைபேசி / மின்னஞ்சல் |
---|---|---|---|
1 | புள்ளிஇயல் துணை இயக்குநர் | இணைப்புக்கட்டிடம்-2 ஆம் தளம், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல்-637003. |
தொலைபேசி எண்: 04286-280204 கைபேசி எண்:9445458072 மின்னஞ்சல் adsnmk@gmail[dot]com ddsnmk@gmail[dot]com |
2 | புள்ளிஇயல் உதவி இயக்குநர் நாமக்கல் கோட்டம் | இணைப்புக்கட்டிடம்-2 ஆம் தளம், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல்-637003. |
கைபேசி எண் : 9445458118. |
3 | புள்ளிஇயல் உதவி இயக்குநர்- திருச்செங்கோடு கோட்டம் | இணைப்புக்கட்டிடம்-2 ஆம் தளம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் |
கைபேசி எண் : 9445458119. |
4 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், எருமப்பட்டி(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம்-637013 |
கைபேசி எண் : 9445458305 |
5 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், சேந்தமங்கலம்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம் |
கைபேசி எண் : 9445458307 |
6 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வெண்ணந்தூர்(அஞ்சல்), இராசிபுரம்(வட்டம்) நாமக்கல் மாவட்டம்-637013 |
கைபேசி எண் : 9445869728 |
7 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், எலச்சிப்பாளையம்(அஞ்சல்), திருச்செங்கோடு(வட்டம்) நாமக்கல் மாவட்டம்-637013 |
கைபேசி எண் : 9445869724 |
8 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், புதுச்சத்திரம்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம்- |
கைபேசி எண் : 9445458309 |
9 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், நாமகிரிப்பேட்டை(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம்-637013 |
கைபேசி எண் : 9445869726 |
10 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், பள்ளிப்பாளையம்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம்- |
கைபேசி எண் : 9445458314 |
11 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், பரமத்தி(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம்- |
கைபேசி எண் : 9445869727 |
12 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கபிலர்மலை(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம். |
கைபேசி எண் : 9445458310 |
13 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், | புள்ளிஇயல் உதவி இயக்குநர் அலுவலகம் திருச்செங்கோடு கோட்டம், இணைப்புக்கட்டிடம்-2 ஆம் தளம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் |
கைபேசி எண் : 9445458308 |
14 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், மல்ல சமுத்திரம்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம். |
கைபேசி எண் : 9445869724 |
15 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், மல்ல சமுத்திரம்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம். |
கைபேசி எண் :9445458414 |
16 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், மோகனூர்(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம். |
கைபேசி எண் :9445458305 |
17 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர், | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் அலுவலகம் செம்மேடு, வாழவந்தி நாடு, கொல்லிமலை(அஞ்சல்) நாமக்கல் மாவட்டம். |
கைபேசி எண் : |
18 | வட்டாரப்புள்ளிஇயல் ஆய்வாளர் | இணைப்புக்கட்டிடம்-2 ஆம் தளம், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல்-637003. |
கைபேசி எண் :9445458313 |