நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

வல்வில்ஓரி விழா

வில்வித்தை போட்டி

வல்வில்ஓரி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் (தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 17 மற்றும் 18ஆம் தேதிகளில்) கொல்லிமலையில் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் பல்வகை பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அத்துடன் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வல்வில் ஓரி விழாவின் போது நடைபெறும் வில்வித்தை போட்டிகளில் பல பகுதிகளிலுள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பர்.