Close

நாமக்கல் மலைக்கோட்டை

வழிகாட்டுதல்

நாமக்கல் மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும். இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும். இக்கோட்டையானது மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இதில் காணப்படும் கற்கள் மற்றும் பாறைகளில் 9ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இக்கோட்டையை முற்றுகையிட்டபொழுது ஏற்பட்ட மோதல்களின் வடுக்களை காணமுடிகிறது. இம்மலையின் இரு பக்கங்களிலும் தலா ஒரு குகைக் Nகுhவில்கள் அமைந்துள்ளன. இவை நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் ஆகும்.

புகைப்பட தொகுப்பு

  • நாமக்கல் கோட்டை - இரவு காட்சி
  • நாமக்கல் கோட்டை படிக்கட்டுகள்
  • நாமக்கல் கோட்டை பக்க காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

சேலம்-கருர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை வழியாக

நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது.